பழமொழி: "மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாகாது"
வெளிப்படை விளக்கம் : மண்ணினால் செய்யப்பட்ட ஒரு குதிரையானது நீரிலே கரைந்துவிடும் என்பதால் ஆற்றில் இறங்க அதை நம்பாதே.
உண்மை விளக்கம் : மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்கலாகாது.
உண்மை விளக்க விளக்கம் : மண் குதிரை என்பது மண் குதிரையை என திரிபடைந்துவிட்டது. அதாவது, ஆற்று நீரோட்டங்களிலே காணப்படும் மணற் திட்டியையே மண் குதிர் (மட்குதிர்) என்கிறோம். அதில் கால் வைத்தவுடன் அக் குதிர் காணாமற் போய்விடும்.
Thursday, July 26, 2007
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
Ah! awesome... nice work..
என் இந்தப் பதிவைப் படிக்கவும்.http://paris-johan.blogspot.com/2006/12/blog-post_02.html
மண் குதிரை -மங்கு திரை -மண் குதிர்....
மிக்க நன்றி யோகன்,
உங்களது பதிவு http://paris-johan.blogspot.com/2006/12/blog-post_02.html பார்த்து மகிழ்ந்தேன். நல்ல விவாதம். உண்மையில் தவறாக விளங்கிக் கொள்ளப் படுகின்ற அனைத்து பழமொழிகளையும் ஒரு வலைப்பூவின் கீழ் தர முயற்சிக்கிறேன். உங்களது உதவிகளையும் வேண்டி நிற்கிறேன்.
இன்னும் பல பழமொழிகளுக்கு உண்மை அர்த்தம் கண்டு பிடியுங்கள்... தமிழை தவராக புரிந்துகொண்ட எம்மவருக்கு வியப்பாக இருக்கிறது..
பழமொழிக்கு பல மொழிகள் இருந்தாலும் அதற்கு ஒரு மொழி கண்ட மதுவுக்கு வாழ்த்துக்கள்....
நன்றி
Post a Comment