Thursday, July 26, 2007

பழமொழி: "பந்திக்கு முந்து படைக்கு பிந்து"

வெளிப்படை விளக்கம் : உணவு சம்மந்தப்பட்ட விடயங்களுக்கு உடனடியாக செல்; சண்டை சம்மந்தப்பட்ட விடயங்களுக்கு போவதை குறை.
உண்மை விளக்கம் : எப்பொழுதும் கல்வி கலைகளில் சிறந்து விளங்கு.
உண்மை விளக்க விளக்கம் : எமது பண்டைய வரலாறுகளில் ஒரு பந்திக்கு முதலில் அழைப்பது கல்வி கலைகளில் சிறந்து விளங்கிய ஒருவரையே அத்துடன் ஒரு படைக்கு பின்னால் தலைவனாக நின்று அதை வழிநடத்தி செல்வதும் கல்வி கலைகளில் சிறந்து விளங்கும் ஒருவரே.

1 comment:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

உண்மையான விளக்கமொரு புறமிருக்க!! தவறாகக் கருதியது கூட மிகச்சரியாக இருக்கிறது. கவனித்துப்பாருங்கள்.
பந்தியில் முந்தினால் தான் கட்டிப்பருப்புக் கறி கிடைக்கும். கடைசியில் போனால் பருப்புக்கறியே கிடைக்காது. அல்லது சுடுநீர் கலந்த கறியே கிடைக்கும்.
படையில் பிழைத்திருக்க வேண்டுமானால் பின்னுக்கு நின்றால் தான் நடக்கும்...அதனால் தான் உயரதிகாரிகள் உயிருடன் இருக்க மற்றவர்கள் சாகிறார்கள்.
நான் நடைமுறையைக் கூறுகிறேன்.