Thursday, August 2, 2007

அடுத்தது...

பழமொழி : "ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்"

Monday, July 30, 2007

பழமொழி : "கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன்"

வெளிப்படை விளக்கம் : கல்லாக இருந்தாலும் சரி புல்லாக இருந்தாலும் சரி கணவனை மனைவி மதிக்கவேண்டும்.
உண்மை விளக்கம் : படிக்காதவனாக இருந்தாலும் சரி ஒழுக்கம் குறைந்தவனாக இருந்தாலும் சரி கணவனை மனைவி மதிக்கவேண்டும். (இது ஒரு பழமொழியா!!!)
உண்மை விளக்க விளக்கம் : மூலப் பழமொழியான "கல்லானானாலும் கணவன் புல்லனானாலும் புருசன்" ஆனது "கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன்" என பிறழ்ந்துவிட்டது. கல்லான் = படிக்காதவன்; புல்லன் = அறிவற்றவன், ஒழுக்கமற்றவன்.

Friday, July 27, 2007

பழமொழி : "ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்"

வெளிப்படை விளக்கம் : ஒரு வைத்தியர் தனது மருந்துகளால் பலரினை இறக்கச் செய்திருந்தாரானால்தான் அவர் ஒரு வைத்தியர் ஆவார்.
உண்மை விளக்கம் : குறிப்பிடத்தக்களவு மரம், செடி மற்றும் கொடிகளின் வேர்களினை (அதன் பண்புகளை) அறிந்தவன் வைத்தியம் செய்வதற்குரிய அறிவினைப் பெறுகிறான்.
உண்மை விளக்க விளக்கம் : உண்மையில் இந்த பழமொழி திரிபடைந்துவிட்டது. இதன் மூலப் பழமொழியானது "ஆயிரம் வேரைக் கண்டவன் அரை வைத்தியன்" ஆகும்.
பழமொழி : "அடி உதவுவது போல் அண்ணன், தம்பி உதவமாட்டான்"

வெளிப்படை விளக்கம் : வன்முறைகளை பயன்படுத்தி ஒரு காரியத்தை நிறைவேற்ற முடியும்.
உண்மை விளக்கம் : வாழ்க்கை சொந்தக் காலில் நின்று ஒவ்வொரு காரியத்தையும் தனியனாக எதிர் கொள்ளப் பழகு.
உண்மை விளக்க விளக்கம் : அடி = பாதம், அதாவது உனது சொந்த அடி உதவுவது போல் அண்ணன், தம்பி உதவமாட்டான். அண்ணனையோ தம்பியையோ நம்பியிராமல் உன் சொந்தக் காலில் நிற்கப் பழகு.

Thursday, July 26, 2007

பழமொழி: "மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாகாது"

வெளிப்படை விளக்கம் : மண்ணினால் செய்யப்பட்ட ஒரு குதிரையானது நீரிலே கரைந்துவிடும் என்பதால் ஆற்றில் இறங்க அதை நம்பாதே.
உண்மை விளக்கம் : மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்கலாகாது.
உண்மை விளக்க விளக்கம் : மண் குதிரை என்பது மண் குதிரையை என திரிபடைந்துவிட்டது. அதாவது, ஆற்று நீரோட்டங்களிலே காணப்படும் மணற் திட்டியையே மண் குதிர் (மட்குதிர்) என்கிறோம். அதில் கால் வைத்தவுடன் அக் குதிர் காணாமற் போய்விடும்.
பழமொழி: "பந்திக்கு முந்து படைக்கு பிந்து"

வெளிப்படை விளக்கம் : உணவு சம்மந்தப்பட்ட விடயங்களுக்கு உடனடியாக செல்; சண்டை சம்மந்தப்பட்ட விடயங்களுக்கு போவதை குறை.
உண்மை விளக்கம் : எப்பொழுதும் கல்வி கலைகளில் சிறந்து விளங்கு.
உண்மை விளக்க விளக்கம் : எமது பண்டைய வரலாறுகளில் ஒரு பந்திக்கு முதலில் அழைப்பது கல்வி கலைகளில் சிறந்து விளங்கிய ஒருவரையே அத்துடன் ஒரு படைக்கு பின்னால் தலைவனாக நின்று அதை வழிநடத்தி செல்வதும் கல்வி கலைகளில் சிறந்து விளங்கும் ஒருவரே.